தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்.. சரக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..?

தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்.. சரக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..?

மதுபானக் கடைகளுக்கு மதுபானப் பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி, இறக்கும் சுமைப்பணித் தொழிலாளர்கள் போராட்டம் 

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு மதுபானப் பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி, இறக்கும் சுமைப்பணித் தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணித் தொழிலாளர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய மதுபானப் பெட்டிகளை வாகனங்களில் ஏற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளை வாகனங்களில் ஏற்றி இறக்குவதற்கு 

தற்போது ஒரு தொழிலாளிக்கு தினசரி ₹200 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது , காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்தக் கூலி போதுமானதல்ல என்று தொழிலாளர்கள் சார்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, ஒரு மதுபானப் பெட்டியை கடையில் இறக்குவதற்கு ₹15, லாரி ஓட்டுநர்களுக்கு ₹1,000 கூலி வழங்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு PF மற்றும் ESI பிடித்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 

தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் CITU சார்பில் மாநிலம் முழுவதும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் நிலையில், தொழிலாளர்களுக்கான கூலி மட்டும் குறைவாக இருப்பது நியாயமல்ல, கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் தொடரும்” என தொழிலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு டாஸ்மாக் சுமை பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) செயலாளர் ஆதிமூலம் தலைமை வகித்தார். இதில் சங்கத்தில் தலைவர் இசக்கிராஜா, செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.