கன்னியாகுமரிக்கு வழி கேட்ட வடஇந்திய பைக் ரைடர்… கனிவுடன் வழிகாட்டிய தூத்துக்குடி போலீஸ்... சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!

கன்னியாகுமரிக்கு வழி கேட்ட வடஇந்திய பைக் ரைடர்… கனிவுடன் வழிகாட்டிய தூத்துக்குடி போலீஸ்... சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!

ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வட இந்திய பைக் ரைடர் ஒருவருக்கு, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  போக்குவரத்து காவலர் ஒருவர் மிகுந்த கனிவுடன் வழிகாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி நெட்டிசன்களின் மனங்களை வென்று வருகிறது.

சாலையோரம் நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணம்

தூத்துக்குடி அருகே உள்ள  மேம்பாலத்தின் அடியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு (NH 44) எப்படிச் செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த ரைடர் ஒருவர், அங்கிருந்த தமிழக காவலரை அணுகுகிறார்.

மொழி இடைவெளி இருந்தபோதிலும்—பயணி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச, காவலர் தமிழில் சைகைகள் மூலம் விளக்கிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது:

துல்லியமான வழிகாட்டல்: நேராக 60 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்றும், அதன்பின் இடதுபுற பைபாஸ் வழியாகத் திரும்பினால் எளிதாகக் கன்னியாகுமரியை அடையலாம் என்றும் காவலர் பொறுமையாக விளக்குகிறார்.

பாதுகாப்பான பயணம்: பிரதான சாலையில் வாகனங்கள் வேகமாகச் செல்வதைக் கவனித்து, பாதுகாப்பாக ‘யு-டர்ன்’ (U-turn) எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.

அன்பான பிரியாவிடை: வழியைக் கூறி முடித்ததும், இன்முகத்தோடு கையசைத்து வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார் அந்த காவலர்.

அதுமட்டுமின்றி அந்த youtube பைக்கர் இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தி உளளார்.

குவியும் பாராட்டுகள்: 

காவல்துறையினர் என்றாலே கடுமையானவர்கள் என்ற பொதுவான எண்ணத்தை உடைத்து, பிற மாநில பயணியிடம் மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் நடந்துகொண்ட இக்காவலரின் மனிதநேயத்தை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறையின் விருந்தோம்பலையும் பண்பையும் பறைசாற்றும் இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் வைரலாகி வருகிறது.

Click this to watch video 

https://www.instagram.com/reel/Dc8k6ObTjTe/?stkn=MTJwamx3OG00b3Np