பருப்பில்லாதே நேரங்களில் ரோட்டு கடை ஸ்டைல் தக்காளி சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
பருப்பில்லாத தக்காளி சாம்பார் | Tomato Sambar Recipe In Tamil
Calories: 76kcal
Equipment
-
1 கடாய்
-
1 பவுள்
-
1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கப் தக்காளி
- 6 பல் பூண்டு
- 1 கப் பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- நெய் சிறிதளவு
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளியை நன்கு கழுவி விட்டு சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தக்காளி, பூண்டு, வெங்காயம், வர மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு கடலை மாவை கட்டிகள் இல்லாமல் கரைத்து இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பிறகு குழம்பு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழை, நெய் விட்டு கிளறி விடவும்.
- அவ்வளவுதான் சுவையான, சுலபமான, பருப்பில்லாத தக்காளி சாம்பார் தயார்.
Nutrition