20 ஜனவரி இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்!

20 ஜனவரி இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்!

மேஷம்

புதிய முயற்சியை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர் கள் வருகை மகிழ்ச்சி தரும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எப்போதும்போல் இருக்கும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்

கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. சிலருக்கு திடீர் பண வரவுடன் செலவுகளும் ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்

பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.

கடகம்

உங்கள் ரசனைக்கேற்ப புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வகையில் நீண்டநாளாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சி சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு உற்சாகமும், மகிழ்ச்சியும் தரும். இன்று தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

சிம்மம்

எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக் கூடும். புதிய வாடிக்கையாளரின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

கன்னி

உறவினர்களிடம் பேசும் போது பொறுமை அவசியம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு உறவினர் அல்லது நண்பர்கள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

துலாம்

எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். சக வியாபாரிகளால் வீண் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்

சகோதரர்கள் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை பாராட்டப்படும். சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு

காரியங்களில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தேவையான பணம் இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் மனச்சஞ்சலம் உண்டாகும். சகோதர வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்

உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் தடைப்பட்டு வந்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கும்பம்

கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

மீனம்

குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.