தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு... பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம்!

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க ஆட்சியர் ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு... பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம்!

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க ஆட்சியர் ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகிற பிப்ரவரி 1, 2, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாம்பரம் விமானப்படை அலுவலகத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். 

பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் 27.06.2002 முதல் 27.06.2006 வரையான காலத்தில் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகதவர்கள் மட்டும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Diploma Pharmacy Or B.Sc Pharmacy படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். திருமணமாகதவர்கள் 27.06.1999 முதல் 27.06.2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும் திருமணமான விண்ணப்பதாரர்கள் 27.06.1999 முதல் 27.06.2002 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14600 வழங்கப்படும். பயிற்சியின் முடித்து பணியில் சேர்ந்தவுடன் ஊதியம் ரூ.26900 வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு https://airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தேர்வு முறை மற்றும் தேர்வு நாளன்று எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் Thoothukudi Employment Office Telegramசேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்யவும். இந்த Google படிவத்தை 9942503151 என்ற வாட்ஸ்அப் எண்ணில் செய்தி அனுப்பியும் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்.