உங்க மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா..? இனி கவலை வேண்டாம்.. இதை மட்டும் பிளே செய்யுங்க.! மொத்த நீரும் வெளியேறிடும்.!

உங்க மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா..? இனி கவலை வேண்டாம்.. இதை மட்டும் பிளே செய்யுங்க.! மொத்த நீரும் வெளியேறிடும்.!

உங்க மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா..? இனி கவலை வேண்டாம்.. இதை மட்டும் பிளே செய்யுங்க.! மொத்த நீரும் வெளியேறிடும்.!

சமீப காலகட்டத்தில் பெரும்பானமையான மக்கள் தங்களுடைய‌ ஸ்மார்ட்போனை (smartphone) பாத்ரூமிற்குள் எடுத்துச் செல்கின்றனர். இன்னும் சிலர் சிங்க்கிள் (sink) கை கழுவும் போது கூட, ஒற்றை கைகளில் ஸ்மார்ட் ஃபோனை இயக்குகிறார்கள். இன்னும் சிலர் நீச்சல் குளம் (Swimming Pool) அல்லது குளிக்க ஆற்றுக்கு செல்லும்போது கூட ஸ்மார்ட்போனை அவர்களுடனேயே எடுத்துச் செல்கிறார்கள். இதனால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய போன் (Phone) கைத் தவறி தண்ணீரில் விழ அதிக வாய்ப்புள்ளது. அல்லது நீர் உங்கள் போனின் மீது படவும் வாய்ப்புள்ளது. சிறிய அளவு தண்ணீர் போன் மீது படுவது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால், அதிக அளவு தண்ணீர் உங்கள் போன் மீது பட்டால் கட்டாயம் அது பிரச்சனை தான்.

அதிலும், நீருக்குள் உங்களுடைய மொபைல் (Mobile) விழுந்துவிட்டால், ஏற்படப் போகும் மோசமான விளைவுகளை நீங்கள் டபுள் ரேட்டில் அனுபவிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் நீரில் விழுந்த போனை உடனே வெளியில் எடுக்க வேண்டும். அடுத்தபடியாக நம்மில் பெரும்பாலானோர் உடனே போனை உதறல் செய்வோம். கட்டாயமாக நீங்கள் செய்யக்கூடாத முதல் விஷயமே இதுதான். எப்போதும், போனை நீரில் இருந்து எடுத்தவுடன் அவற்றை உதறக் கூடாது. ஏனெனில், வெளியில் வரும் நீரை விட போன்னிற்குள் செல்லக்கூடிய நீரின் ஆற்றலே இங்கு அதிகமாக இருக்கும். அதனால், எப்போதும் இதை நீங்கள் நிச்சயமாகச் செய்யக்கூடாது. இதற்குப் பதிலாக, நீரில் விழுந்த போனை எடுத்து உடனே சில குறிப்பிட்ட ஆடியோக்களை (Audio) நீங்கள் பிளே (Play) செய்ய வேண்டும். இப்படி பிளே செய்வதன் மூலம், உங்கள் போனிற்குள் சென்ற தண்ணீர் மொபைல் ஸ்பீக்கர்கள் (Mobile Speakers) வழியாகவும்; போனின் மற்ற ஓட்டைகள் வழியாகவும் வெளியில் அனுப்பப்படும். 

செய்முறை 

உங்கள் போன் நீரில் விழுந்தால், நீங்கள் எங்கிருந்து இந்த ஆடியோவை பிளே செய்யலாம் என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம். முன்பே சொன்னது போல், உங்கள் ஸ்மார்ட் போன் நீரில் இருந்து எடுத்தவுடன் உதறுவதைச் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக ஒரு துணியை எடுத்து, உங்கள் போனை சுற்றி உள்ள நீரை அதிக அழுத்தம் இல்லாமல் துடைக்க வேண்டும். இதற்கு பின்பு, உங்களுடைய கூகுள் குரோம் பிரவுசர் (Google Chrome Browser) சென்று ஃபிக்ஸ் மை ஸ்பீக்கர்ஸ் (Fix My Speakers) என்று டைப் செய்யவும்.

இந்த https://fixmyspeakers.com இணையதள பக்கத்திற்கு சென்று, அந்த பேஜின் முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்படும் ப்லோவ் (blow) மற்றும் நீர் துளி (water drops) போன்று காட்சியளிக்கும் ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும். இதற்கு முன் உங்களுடைய போனின் வால்யூமை (Volume) முழுமையாக மேக்சிமம் (Maximum) வரைக்கும் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது உங்கள் ஃபோனில் ஹை-ஃபிரிக்வென்சி ஆடியோ பைல் ப்ளே செய்யப்படும். இதன் மூலம் உங்கள் போன் வைப்ரேட் செய்யப்பட்டு, அதே நேரத்தில் சத்தமான ஆடியோவை ப்ளே செய்து, போனில் இருக்கும் நீரை வெளியில் அனுப்பும். இப்படி குறைந்தது இரண்டல்ல மூன்று முறை இந்த ஆடியோவை ப்ளே செய்து உங்கள் ஃபோனில் இருக்கும் நீரை வெளியேற்றவும். இதை செய்த பின்பு உங்கள் போனை நிழலில் உலரவிடவும். சிலிக்கா ஜெல் பயன்படுத்தி உங்கள் போனை காற்று புகாத பைக்குள் 1 நாள் வைக்கவும். அரிசி பைகளில் போனை வைப்பது அவ்வளவு சிறந்த பயனை அளிக்காது. வேறு ஏதேனும் சிக்கல் தோன்றினால், மொபைல் சர்வீஸ் சென்டரில் போனை பழுது பார்க்கவும். இந்த டிரிக்கை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள இனைந்திருங்கள்...

Join WHATSAPP GROUP: Click Here