தண்டவாளத்தில் படுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தூத்துக்குடி ஐயப்பன் நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மகாராஜா மகன் சிங்காரவேல் (30). இவரது மனைவி மாலதி (26). இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. சிங்காரவேல் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுனராக தொழில் செய்து வந்துள்ளார். நேற்று சிங்காரவேல் மற்றும் அவரது மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், டிஎம்எஸ் நகரில் தண்டவாளம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான் மார்க்கமாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.