மதுரா கோட்ஸ் நிலத்தை பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது - ஆட்சியரிடம் மனு!!

மதுரா கோட்ஸ் நிலத்தை பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது - ஆட்சியரிடம் மனு!!

தூத்துக்குடியில் உரிய அரசு அனுமதி பெறாமல் மதுரா கோட்ஸ் நிலத்தை பொதுவெளியில் பிளாட்டாக விற்பனைக்கு கொண்டுவருவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த வி அலங்கார பரதர், சே. பாக்கியராஜ், மை. ஜாய்ஸ்டன், மனோஜ் குமார், ரெத்தனசாமி கொறையரா, விஜயன், சா. ஜாய்சன் சந்தியா குருஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியார் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் பொது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த விற்பனை முன்பதிவு மேளா, நவம்பர் 8 மற்றும் 9, 2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும், பொதுமக்களின் நலன் கருதி மதுரா கோட்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இந்த நில விற்பனைக்கு அரசு அனுமதி பெறவில்லை. பொதுமக்களிடம் இருந்து 50% முன்பணம் பெற்றுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து பத்திரம் தருவதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்வதாகவும், இது சட்டவிரோதமானது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.