இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது!

தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது!

தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் 'ஐ.சி.ஜி.எஸ். ஆதேஷ்' ரோந்து கப்பலில் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கி பிடித்தனர். அப்போது, அந்த படகில் இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 6 இலங்கை மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். படகையும், 6 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் தங்கள் கப்பல் மூலம் கரைக்கு அழைத்து வருகின்றனர். 

அவர்கள் இன்று (திங்கட்கிழமை) மதியம் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைவார்கள் என தெரிகிறது. தொடர்ந்து 6 மீனவர்கள், படகுடன் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னரே கைதான மீனவர்களின் பெயர் விவரம், எப்படி இந்திய கடல் எல்லைக்குள் வந்தனர் போன்ற விவரங்கள் தெரியவரும் என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர்.