பிரசவத்துக்குப் பிறகான மனச்சோர்வு: வாய்வழி மாத்திரைக்கு FDA அங்கீகாரம்!
பிரசவத்துக்குப் பிறகான மனச்சோர்வு: வாய்வழி மாத்திரைக்கு FDA அங்கீகாரம்!
மகபேற்றுக்குப் பிறகான மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்க மாத்திரையை உபயோகிக்கலாம் என, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (The Food and Drug Administration -FDA) நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
பிரசவத்துக்குப் பிறகு 7 பெண்களில் ஒருவர் பாதிக்கப்படும் இந்த மனச்சோர்வுக்கு சிகிச்சை என்பது மருத்துவத்தில் சிறந்த மைல்கல் என கூறப்பட்டுள்ளது. இதற்கான மாத்திரையை, குழந்தை பிறந்த பிறகு தினமும் ஒரு மாத்திரை வீதம், 14 நாள்களுக்குப் பரிந்துரைக்கலாம் என FDA தெரிவித்துள்ளது.
மாத்திரை
``மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு என்பது தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒரு நிலை. இதில் பெண்கள் சோகம், குற்ற உணர்வு ஆகிய உணர்வுகளை அனுபவிக்கிறார்கள். இதனால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பும் சீர்குலையும்.
எனவே இதற்கு வாய்வழி மருந்தைப் பரிந்துரைப்பதன் மூலம் பிரசவத்துக்குப் பிறகான பெண்களின் மனச்சோர்வைக் குறைக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்" என FDA -ன் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மனநலப் பிரிவின் இயக்குநர் டிஃப்பனி ஆர். ஃபார்ச்சியோன் கூறியுள்ளார்.
மகப்பேறு
`மருந்துக்கு பதில் ஆசிட் செலுத்திய மருத்துவர்கள்' - தவறான சிகிச்சையால் தவிக்கும் அமெரிக்க பெண்!
முன்பெல்யலாம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள பெரும்பாலான பெண்கள் ஆலோசகர்களை அணுகுவார்கள். நீண்ட காலம் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். தற்போது அதற்கெல்லாம் மாற்றாகத்தான் வாய்வழி மாத்திரையை அங்கீகரித்துள்ளது FDA.
இதை பற்றி பேசியுள்ள, வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் பெண்களின் மனநிலை கோளாறுகளுக்கான மையத்தின் இயக்குநர் சமந்தா மெல்ட்ஸர்-ப்ரோடி, ``தாய்மார்களின் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு கேம் சேஞ்சராக இந்த மருந்து இருக்கப்போகிறது. அதே நேரம் மருந்தின் பக்க விளைவுகளாக தூக்கம், தலைச்சுற்றல், சோர்வு, வயிற்றுப்போக்கு, சிறுநீர்த்தொற்று, ஜலதோஷம் ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. தாய்மார்கள் இந்த மாத்திரையை உட்கொண்ட பின் குறைந்தது 12 மணி நேரம் வாகனம் ஓட்டக்கூடாது. தூங்கும் முன் இரவில் இதை எடுப்பது சிறந்தது" என தெரிவித்துள்ளார்.