தூத்துக்குடியில் பரிதாபம் நுங்கு விழுந்து 14 வயது சிறுவன் பரிதாப பலி!

கடம்பூர் அருகே நுங்கு விழுந்து 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தூத்துக்குடியில் பரிதாபம் நுங்கு விழுந்து 14 வயது சிறுவன் பரிதாப பலி!

கடம்பூர் அருகே நுங்கு விழுந்து 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் ரயில்வே ரோட்டைச் சேர்ந்தவர் சோலையப்பன் மகன் சுரேஷ் குமார் (14). இவர் அங்குள்ள பணை மரத்தில் கம்பு வைத்து நுங்கு பறித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் கொத்தாக நுங்கு  விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். 

இதையடுத்து சுரேஷ் குமாரை கயத்தார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக கடம்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.