ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தொடர் மழையால் நிரம்பிய குளத்தின் கறைகளை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மழை காரணமாக நிரம்பிய பாசன குலங்களின் நிலைமகளை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலர் தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமனையால் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை மணியாச்சி, மேலஅரசரடி ஊராட்சி மேல வேலாயுதபுரம் குளம், கீழ வேலாயுதபுரம் கண்மாய், துப்பாசுபட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு மழையினால் உடைப்பு ஏற்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்கள், கீழ அரசரடி ஊராட்சி ஓடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் யூனியன் குளங்களில் சில குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் பல குழுக்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது இவற்றில் சில குளங்களின் கறைகள் வலுவிழந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் நேற்று ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒட்டநத்தம் குளம் மணமகன் கிராமத்தில் யூனியன் குலம் ஆகியவற்றை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குளக்கரைகளில் உறுதித் தன்மை குறித்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் கோரிக்கையின் பேரில் சம்பந்தப்பட்ட குளங்களின் கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மழைக்காலங்களில் குளத்தின் கறைகளின் தன்மை மற்றும் நீர் உடனுக்குடன் தொடர்ந்து கண்காணிக்குமாறு கூறினார் இந்த ஆய்வின்போது யூனியன் ஆணையாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல், அழகுமலை, ஊராட்சி செயலர், பழனிமுருகன், முத்துலட்சுமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகர் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.