வாட்ஸ்அப் குழு மூலம் பெண் வக்கீல் குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்குப் பதிவு!

சாத்தான்குளம் அருகே வாட்ஸ்அப் குழு மூலம் பெண் வக்கீல் குறித்து அவதூறு பரப்பியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாட்ஸ்அப் குழு மூலம் பெண் வக்கீல் குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்குப் பதிவு!

சாத்தான்குளம் அருகே வாட்ஸ்அப் குழு மூலம் பெண் வக்கீல் குறித்து அவதூறு பரப்பியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஐகோர்ட்டு ராஜா. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவமீனா (30). வக்கீலாக உள்ளார். இதற்கிடையே ஐகோர்ட்டு ராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாசலம் மகன் கொளுந்து வேல் என்பவருக்கும் தசரா குழு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

கொளுந்துவேல் தற்போது உடன்குடி புதுமனை தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகோபி என்பவரது வாட்ஸ்அப் குழு மூலம் சிவமீனா குறித்து கொளுந்துவேல் அவதூறாக பதிவு வெளியிட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுதொடர்பான பதிவு சமூகவலைதளத்தில் பரவியது. இதுகுறித்து சிவமீனா, சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில்,கொளுந்துவேல் மீது இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.