2.19 மீட்டர் உயரம் தாண்டி இந்தியாவுக்கு வெண்கலம்: ஆசியப் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் ஆதர்ஷ் ராம்

2.19 மீட்டர் உயரம் தாண்டி இந்தியாவுக்கு வெண்கலம்: ஆசியப் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் ஆதர்ஷ் ராம்

12வது ஆசிய அளவிலான உயரம் தாண்டும் போட்டி கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ராம் ஜே, 2.19 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தச் சிறப்பான சாதனையின் மூலம், இந்திய அணிக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்ததுடன், இந்திய உயரம் தாண்டுதல் வரலாற்றிலும் ஆதர்ஷ் ராம் ஜே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். ஆசிய அளவிலான இந்தப் போட்டியில் அவரது செயல்திறன் விளையாட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் ராம் ஜே, இயந்திரவியல் (B.Tech Mechanical) பட்டம் பெற்றவர் ஆவார். தற்போது, மேற்கு ரயில்வேயில் மூத்த சீசிடிசி (Senior CCTC) ஆக பணியாற்றி வருகிறார்.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய உயரம் தாண்டுதல் தரவரிசையில் 2.21 மீட்டர் சாதனையுடன் 2வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த சாதனை, தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெரும் பெருமையை சேர்த்துள்ளது.