“மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வரவு: 1.31 கோடி பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

“மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வரவு: 1.31 கோடி பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக மகளிருக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், ரூ.5,000 இன்று காலை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 தொகையுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட வீடியோவில் முதல்வர் கூறியதாவது:

“தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை செய்தாலும் பின்வாங்க மாட்டேன்.”

மேலும், தேர்தலை காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்க முயற்சி செய்யப்படுவதாகவும், அதனை முன்கூட்டியே வழங்கி திராவிட மாடல் அரசு செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மொத்தம் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு இன்று காலை ரூ.5,000 வரவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.