மோட்டார் பைக் மோதி ஜவுளிக்கடை ஊழியர் சாவு!
மோட்டார் பைக் மோதி ஜவுளிக்கடை ஊழியர் சாவு!

ஏரலில் மோட்டார் பைக் மோதி சைக்கிளில் சென்ற ஜவுளிக்கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் முதலிமார் மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (55). இவர் ஏரலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். மாரியப்பன் நேற்று காலையில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு சைக்கிளில் ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் பைக் இவர் மீது மோதியது. இதில் மாரியப்பன் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது மகன் சொர்ணராஜா அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த குரும்பூர் போலீஸ்காரர் சாலமன் மீது விசாரணை நடத்தி வருகின்றார்.