உப்பளத் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலி 700 ரூபாய் வழங்க கோரி சிஐடியு விளக்க கூட்ட‌ம்!

உப்பளத் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலி 700 ரூபாய் வழங்க கோரி சிஐடியு விளக்க கூட்ட‌ம்!

உப்புளத் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலி ரூ.700 வழங்க கோரியும், பணியிடத்தில் குடிநீர் வசதி, ஓய்வு வரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாணிக்கம் மஹால் அருகே உப்பு தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் சிஐடியு உப்பு தொழிலாளர் சங்கம் செயல் தலைவர் லிங்கம்மாள் தலைமை வகித்தார், சங்கத்தின் தலைவர் பொன்ராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சங்கத்தின் செயலாளர் கே.சங்கரன், சங்கத்தின் பொருளாளர் கே.மணவாளன், சி ஐ டி யு நிர்வாகிகள் ரவி தாகூர், கே.பாஸ்கரன், ராமசாமி, முனியசாமி, பக்கீல், பன்னீர்செல்வம், பன்னீர், கிருஷ்ணம்மாள், கிருஷ்ணன், உள்ளிட்ட பல‌ர் கலந்து கொண்டனர்.