Google Pay வில் பணம் அனுப்பும் போது தவறுதலாக வேறு யாருக்காவது பணம் அனுப்பிவிட்டால் அதை எப்படி மீட்பது என்பது தெரியுமா?
Google Pay வில் பணம் அனுப்பும் போது தவறுதலாக வேறு யாருக்காவது பணம் அனுப்பிவிட்டால் அதை எப்படி மீட்பது என்பது தெரியுமா?
இதுகுறித்து வீரத்தமிழச்சி என்பவரின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தொழில் முனைவோர் அஜய் குமார் பெரியசாமி என்பவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: என் நண்பர் ஒருவர் அண்மையில் அவருடைய நண்பருக்கு ஜிபேயில் ரூ 24 ஆயிரத்தை அனுப்பியிருந்தார். ஆனால் போன் நம்பரில் தெரியாமல் ஒரு நம்பரை மாற்றி போட்டதால் வேறு ஒருவரது அக்கவுண்டிற்கு அந்த பணம் சென்றுவிட்டது.
இவருக்கு என்ன செய்வது என தெரியாமல் எனக்கு போன் செய்து கேட்டார். ஜி பே அனுப்பும் போது தவறுதலாக வேறு யாருக்காவது பணம் அனுப்பிவிட்டால் அந்த பணத்தை மீட்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்காக npci.org.in என்ற அரசு இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு UPI complaint என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதனுள் Transaction என்ற ஒரு காலம் இருக்கும். அதில் Select issue type என ஒன்று இருக்கும். அதில் incorrectly transferred to another account என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
24 மணி நேரத்தில் உங்கள் புகாரை சரி பார்த்து அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள். இவ்வாறு அஜய்குமார் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் இந்தியாவில் பணத்தை டிஜிட்டலாக பரிமாற்றம் செய்து வருகிறார்கள். பெட்டிக் கடையில் கூட டிஜிட்டலில் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.
பண பரிவர்த்தனைகளை செய்ய யுபிஐ செயலியான கூகுள் பே பயன்படுத்தும் நபராக இருந்தால் அவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி காத்திருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி முதல் உலகின் சில நாடுகளில் கூகுள் பே செயலியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்கு பிறகு குறிப்பிட்ட நாடுகளில் உள்ள மக்கள் இந்த செயலி மூலம் பணம் செலுத்த முடியாது.
கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உள்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகிறார்கள். 2022 ஆம் ஆண்டு கூகுள் வாலட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஜிபே பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. ஆன்லைன் முறையில் பண வரித்தனைகளை செய்யும் பயனர்களுக்கு இந்த செயலி முதல் பரிமாற்றங்களுக்கு யுபிஐ முறையை பயன்படுத்தும்மக்களுக்கு இடையில் பிரபலமாகி வருகிறது.
ஜூன் 4ஆம் தேதி முதல் அமெரிக்காவில் மட்டும்தான் கூகுள் பே நிறுத்தப்படவுள்ளது. அதாவது கூகுள் பே இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. அது போல் சிங்கப்பூரிலும் ஜிபே வேலை செய்யும். கூகுள் வாலட் மூலம் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இதுவரை 180 நாடுகளை சேர்ந்த பயனர்கள் கூகுள் பேவுக்கு பதிலாக கூகுள் வாலட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.