தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை, செல்போன் திருடியவர் கைது!

தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை, செல்போன் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை, செல்போன் திருடியவர் கைது!

தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை, செல்போன் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்நதவர் மைக்கேல் சத்யா கிளிட்டஸ் (43).தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டாராம். இதனால் அவரது மனைவி ரூபி மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு ரூபி மறுத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர் வீட்டில் தனியாக இருப்பதை அந்த வாலிபர் அறிந்து கொண்டார்.

இதனால் நைசாக வீட்டின் பின்புறம் சென்ற வாலிபர் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்து உள்ளார். அங்கு மேஜை மீது இருந்த 1¼ பவுன் தங்க சங்கிலி, ஒரு செல்போன் உள்ளிட்ட ரூ.47 ஆயிரத்து 500 மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு மீண்டும் சுவர் ஏறி குதிக்க முயன்ற போது, ரூபி பார்த்து உள்ளார். உடனடியாக அவர் திருடன்...திருடன் என சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டு சென்று அந்த வாலிபரை விரட்டி பிடித்தனர். 

அவரிடம் இருந்த நகை, செல்போனை அவர்கள் மீட்டனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.