கனமழை எதிரொலி: திருச்செந்தூர் வட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கனமழை எதிரொலி: திருச்செந்தூர் வட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக, பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாக வந்த தகவல்களின் அடிப்படையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

இந்த விடுமுறை அறிவிப்பு திருச்செந்தூர் வட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

கனமழையைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.