ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கூறி மக்கள் நடத்திய ஜனநாயக போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபி எம் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியே தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ஆளுநருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இதில் சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், அப்பாதுரை, தூத்துக்குடி புறநகர் செயலாளர் ராஜா, கோவில்பட்டி நகர் ஜோதி பாசு, ஓட்டப்பிடாரம் சண்முக ராஜ், உடன்குடி ஆறுமுகம், திருச்செந்தூர் முத்துக் குமார், கயத்தாறு சாலமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.