சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : டி.எஸ்.பி., எச்சரிக்கை!!
தூத்துக்குடி ஊரக உள்கோட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஊரக டி.எஸ்.பி., ராஜசுந்தா் உத்தரவிட்டுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவுபடி, தூத்துக்குடி ஊரக உள்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி ஊரக உள்கோட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜசுந்தா் தலைமை வகித்து கூறியது: புலன் விசாரணையில் உள்ள வழக்குகளில் கைது செய்யப்படவேண்டியவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும். புலன்விசாரணையை விரைந்து முடித்து குற்ற பத்திரிக்கையை நீதிமன்றத்தில் இணைய வழியாக தாக்கல் செய்து வழக்குகளுக்கு தீா்வுகாண வேண்டும். பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ ரெளடிகள் மற்றும் சமூகவிரோத குற்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், சிப்காட் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ், முறப்பநாடு காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது, மற்றும் புதுக்கோட்டை காவல் மற்றும் மகளிா் காவல் உதவி ஆய்வாளா்கள், முறப்பநாடு, தட்டப்பாறை, புதியம்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா்கள், காவல் அலுவலா்கள் பங்கேற்றனா்.