கோவில்பட்டி உட்கோட்ட புதிய காவல் உதவி கண்காணிப்பாளர் நீல் ஷர்மா பொறுப்பேற்பு

கோவில்பட்டி உட்கோட்ட புதிய காவல் உதவி கண்காணிப்பாளர் நீல் ஷர்மா பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டக் காவல் உதவி கண்காணிப்பாளராக நீல் ஷர்மா இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவில்பட்டி உட்கோட்டப் பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச் சம்பவங்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.

புதிய காவல் உதவி கண்காணிப்பாளர் நீல் ஷர்மாவுக்கு உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கோவில்பட்டி உட்கோட்டப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி வாழும் வகையில் காவல்துறை நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.