மாவட்ட பூப்பந்தாட்ட போட்டிக்கு ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவிகள் தகுதி

மாவட்ட பூப்பந்தாட்ட போட்டிக்கு ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவிகள் தகுதி

செயிண்ட தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெற்று வந்த தூத்துக்குடி நகர்புற கல்வி வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்ட பூப்பந்தாட்ட போட்டிக்குப் தூத்துக்குடி ஹோலிகிராஸ்பள்ளி அணிகள் தகுதி பெற்றுள்ளன. 14 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் பிரிவில் APC வீரபாகு பள்ளியையும், 17 வயதுக்குட்பட்டோர் சீனியர் பிரிவில் செயின்ட் தாமஸ் பள்ளியையும் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் சூப்பர் சீனியர் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பள்ளியையும் வென்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்றனர்.

அனைத்து பிரிவுகளிலும் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த பூப்பந்தாட்ட அணி மாணவியர்களை பள்ளி தலைமையாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியைகள் திருமதி சோபியா, திருமதி சுஜி, பயிற்சியாளர் பாலசிங் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

போட்டி ஏற்பாடுகளை செயின்ட் தாமஸ் பள்ளி நிர்வாகமும் பொறுப்பாளர் குப்புசாமியும் சிறப்பாக செய்திருந்தனர். மாவட்ட பூப்பந்தாட்ட கழக செயலாளர் கண்ணன் அவர்கள் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளை பாராட்டினார்.