தூத்துக்குடி ரோச் பூங்காவில் பரிசுத்த பனிமய அன்னை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பொருட்காட்சி துவக்கம்

தூத்துக்குடி ரோச் பூங்காவில் பரிசுத்த பனிமய அன்னை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பொருட்காட்சி துவக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில், பரிசுத்த பனிமய அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு அன்னை பொருட்காட்சி குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொருட்காட்சி கோலாகலமாகத் தொடங்கியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பரிசுத்த பனிமய அன்னை பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான அருட்பணி ஜாண் செல்வம், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி ரிக்டா, பாண்டியாபதி பரதர் நலச்சங்கத்தின் தலைவர் இன்னாசி, செயலாளர் அந்தோணிசாமி, ஹெர்மன், பெப்பீரீஸ், ராபர்ட், குயிக்கட், நியூமன், ஜெனிபர், சுகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அன்னை பொருட்காட்சி குழுவின் தலைவர் ஆர்தர் மச்சாது, செயலாளர் பெப்பின் மிசியர் மற்றும் குழு நிர்வாகிகள், பொதுமக்கள், திரளான பக்தர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்த மாபெரும் பொருட்காட்சியில் குடும்பத்துடன் மகிழும் வகையில் பல்வேறு வணிக அரங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவகங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ராட்சச ராட்டினங்கள் (Giant Rides), சாகசம் நிறைந்த மரண கிணறு (Well of Death), பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பரிசுத்த பனிமய அன்னை பேராலய திருவிழா நாட்களில் தினமும் மாலை முதல் இரவு வரை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொருட்காட்சியை பார்வையிட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் அனுபவிக்க ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.