மாதவன் குறிச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் வழங்கல்

மாதவன் குறிச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, மாதவன் குறிச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

மக்கள் தலைவர் ஜி.கே. வாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் எஸ். மால் முருகன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து மாதவன் குறிச்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாதவன் குறிச்சி தொடக்கப்பள்ளி ஆசிரியை இந்திரா, ஆளுமை பொன்ராஜ், ஆல்வை வட்டாரத் தலைவர் பழனிவேல், உடன்குடி வட்டாரத் தலைவர் கணேசன் செம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.

மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.