வேம்பார் தூய ஆவியார் ஆலய பொதுமக்களின் விளையாட்டுவிழா
வேம்பார் தூய ஆவியார் ஆலய பொதுமக்களின் விளையாட்டுவிழா

வேம்பார் தூய ஆவியார் ஆலயத்தின் புனித செபஸ்தியாரின் 309வது பெருவிழா சப்பர பவனி நிறைவுற்றதை தொடர்ந்து நிம்பை நகர் பொதுமக்களின் விளையாட்டுவிழா செபஸ்தியார் ஆலய மைதானத்தில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பார் கிராமத்தில் தூய ஆவியார் ஆலய பெருவிழா சிறப்புடன் நடந்து முடிந்தது.அதன் பின் வழக்கமாக ஆண்டுதோரும் நடைபெரும் நிம்பை நகர் பொதுமக்களின் விளையாட்டுவிழா நடந்தது.விழாவிற்கு ஆலய பங்குத் தந்தை ரோஷன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜோசப்ரவீந்திரன் ஆசிரியை ஜாக்குலின் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.
விளையட்டு போட்டிகளில் 4 வயது முதல் திருமணம் ஆகாத இளைஞர்கள் இளம்பெண்கள் திருமணம் ஆன ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.சுமார் 25 க்கும் மேற்பட்ட வித்தியாசமான வினோதமான போட்டிகள் மாலை முதல் இரவு வரை தொடர்ந்து நடந்தது.சிறுவர்களுக்கான போட்டிகள் நிறைவுபெற்றதும் இளைஞர்கள் திருமணம் ஆணவர்களுக்கான போட்டிகள் தொடர்ந்தது.நான்கு முதல் 5 வயது 6 முதல் 7 வயது என தனித்தனியாக போட்டிகள் நடந்து வெற்றிபெற்றவர்கள் பரிசினை தட்டிச்சென்றனர்.திருமணம் ஆகாத இளைஞர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் மெல்வின் பங்கு பெற்ற குழுவினர் வெற்றிபெற்றனர்.
திருமணம் ஆனவர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் சகாய விஜய் பங்குபெற்ற குழுவினர் பரிசை வென்றனர். பொட்டு ஒட்டுதல் என்ற வினோத விளையாட்டின் மூலம் சிறந்த தம்பதியராக கிளின்டன் யுவான் சியா தம்பதியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியில் வென்றவர்களுக்கான பரிசுகள் மற்றும் விழா ஏற்பாடுகளை உதயதாரகை இளைஞர்கள் செய்திருந்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பங்குத்தந்தை ரோஷன் சிறப்புரையாற்றினார். பள்ளி ஆசிரியை ஜெல்சி நன்றி கூறினார். நடந்த விளையாட்டு விழாவில் ஏராளமான போட்டியாளர்கள் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவங்கிய விளையாட்டு விழா நாட்டுப்பண் இசையுடன் நிறைவடைந்தது