10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடியை சுருட்டிய கும்பல்: 5 பேர் கைது!

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஹிஜாயூ அசோசியேட் பிரைவேட் லிமிடெட்”என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம்  பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப் படும் டெபாசிட் தொகைக்கு 15 விழுக்காடு வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து முதலீட்டாளர்களை வளைப்பதற்காக முகவர்களையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது. இதன்படி இந்த நிறுவனத்தில் பலர் முகவர்களாக பணிபுரிந்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்டினார்கள்.   இது தொடர்பாக கடந்த ஆண்டு  நவம்பரில் பொருளாதார குற்றப்பிரிவு  காவலர்கள் வழக்கு பதிவு செய்து.  நேரு, குரு மணிகண்டன், முகமது  ஷெரீப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கையாக சாந்தி, கல்யாணி, சுஜாதா ஆகிய 3 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அதிக  வட்டித் தருவதாக ஆசை காட்டி  ரூ.800 கோடி மோசடி வழக்கில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 15 பேரையும் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.