தட்டாப்பாறை பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சி வழக்கில் அதிரடி தீர்ப்பு: 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை!

தட்டாப்பாறை பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சி வழக்கில் அதிரடி தீர்ப்பு: 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை!

தூத்துக்குடி: தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10,500 அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மேல தட்டப்பாறையில் இருந்து கீழ தட்டப்பாறை செல்லும் வழியில் உள்ள குவாரி அருகே, கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் சமுத்திரம் (40) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த மந்திர சூடாமணியின் மகன் ஆறுமுகம் (36/26) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பவுல் கணபதியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் துரைபாண்டி (32/26) ஆகிய இருவரையும் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட CJM நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மகேஸ்வரி, ஆறுமுகம் மற்றும் துரைபாண்டி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10,500 அபராதமும் விதித்தார்.

சம்பவம் நடைபெற்ற சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை முயற்சி வழக்கில் இருவருக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.