தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். 

தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் நடைபெற்றது. 

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழைக்காக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அல்பட் ஜான் மாநகராட்சி ஆணையா ப்ரியங்கா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் மின்சார வாரியம் நெடுஞ்சாலைத்துறை வருவாய்துறை உள்ளிட்ட துறை ஊழியர்கள் அனைவரும் தயார்நிலையில் இருக்க வேண்டும் ஜேசிபி வாகணம் மணல்மூட்டைகள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் துறை அதிகாரிகள் குளத்தின் நீர் மட்டத்தை ஆய்வு செய்யவும் உடைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மாநகராட்சி பகுதியில் கழிவு நீர் வெளியேற்றுவதற்கு 38 பம்பு அறைகள் உள்ளது. 58 மோட்டார் பம்புகள்தயார் நிலையில் உள்ளது. அனைத்து துறைகளையும் ஓருங்கிணைத்து கனமழை வந்தாலும் மிக கனமழை வந்தாலும் நிலைமையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு குழு 70 பேர் தயா ர்நிலையில் இருக்கின்றனர் என்று கூறினார் 

ஆலோசனை கூட்டத்தில் கோட்டாட்சியர் பிரபு, மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன் துணை ஆணையர் சரவணக்குமார் உதவி ஆணையர் வெங்கட்ராமன் மருத்துவகல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி அல்பட் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.