கயத்தார் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி தாய், மகன் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையார் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (65). இவரது மனைவி ரேணுகா தேவி (60). இவர்களது மகன் செல்லத்துரை (35). இவர்கள் 3 பேரும் களக்காட்டில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக காரில் வந்தனர். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று மதியம் அவர்கள் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செல்லத்துரை ஒட்டினார்.
கயத்தாறு நான்குவழிச்சாலை தனியார் ஹோட்டல் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் ரேணுகா தேவி, செல்லத்துரை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீஸார் சென்று காயமடைந்த நவநீதகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேணுகா தேவி, செல்லத்துரை ஆகியோர் சடலங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கச்சாவடி தனியார் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்து காரணமாக நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.