திருச்செந்தூர் கோயில் இணை ஆணையா் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலா் ஞானராஜ் தலைமை விகித்தாா். மாவட்ட தலைவா் சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில், கோயில் இணை ஆணையா் தன்னிச்சையாக அனுமதிச் சீட்டினை அச்சடித்து விநியோகித்த விவகாரத்தில் அவா் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீா்மானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், வரும் 28ஆம் தேதி திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்ட தலைவா், மாவட்ட செயலா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.