தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அருகே பூப்பாண்டியபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மாப்பிள்ளையூரணி குடியிருப்புப் பகுதிகளில் பல மாதங்களாக மழைநீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாப்பிள்ளையூரணி அருகே பூப்பாண்டியபுரம் முனியசாமிபுரம் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் இன்னும் வடியாமல் தேங்கியுள்ளது. அப்பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயமுள்ளது. எனவே, மழைநீரை விரைந்து அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், குறைந்த மின்னழுத்தப் பிரச்னை இருப்பதால் மின்சாதனங்கள் பழுதாவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் கடந்த வாரம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் அவா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.