ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்: மோடி அரசு மௌனம்? தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் கடும் ஆர்ப்பாட்டம்

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வளைகுடா பகுதிகளில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டி இந்திய மாணவர் சங்கம் மற்றும் வ.உ.சி கல்லூரி மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் வளைகுடா நாடுகளில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராகவும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.