தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் – மாதம் ரூ.1,000 உதவித்தொகை, விடுதி வசதி, வேலைவாய்ப்பு முன்னுரிமை!

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் – மாதம் ரூ.1,000 உதவித்தொகை, விடுதி வசதி, வேலைவாய்ப்பு முன்னுரிமை!

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கலை ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த இசைப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி மற்றும் நலத்திட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்:

  • பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  • 3 ஆண்டுகள் படிப்பை முடித்தவர்கள் இசைக்கல்லூரிகளில் நேரடியாக 3 ஆண்டு பட்டயப் படிப்பில் (Diploma) சேரும் வாய்ப்பு.
  • அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை.
  • மாணவ, மாணவியருக்கு விடுதி வசதி.

வெளியூரிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.

வேலைவாய்ப்பு வாய்ப்புகள்: 3 ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள்:

கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்துதல்.

நாதஸ்வரம், தவில் கலைஞர்களாக சுயதொழில்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.

தேவாரம் பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு திருக்கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் முன்னுரிமை.

தொடர்புக்கு: தலைமையாசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, தூத்துக்குடி.

???? 94877 39296

கலைத் துறையில் எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.