கானம், ஞானம், தியானம் ஒன்றிணையும் ‘ஆனந்த சங்கமம்’ – தூத்துக்குடியில் 29ம் தேதி!!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறும் ‘ஆனந்த சங்கமம்’ ஆன்மீக சத்சங்க நிகழ்வில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் குருதேன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார்.

கானம், ஞானம், தியானம் ஒன்றிணையும் ‘ஆனந்த சங்கமம்’ – தூத்துக்குடியில் 29ம் தேதி!!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறும் ஆனந்த சங்கமம் நிகழ்வில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் கலந்துகொள்ள உள்ளார். 

இதுகுறித்து வாழும்கலை அமைப்பின் ஆசிரியர் மற்றும் செய்திதொடர்பாளர் மணிகண்டன் கூறுகையில், "தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி வளாகத்தில் வருகிற 29 ம்தேதி மாலை 5.00 மணிக்கு, வாழும்கலை நிறுவனர் குருதேன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கானம், ஞானம், தியானம் உள்ளடக்கிய மிகப்பெரியசத்சங்கம் நிகழ்வு "ஆனந்த சங்கமம்" நடைபெற உள்ளது

வாழும்கலை அமைப்பு பெங்களூரை தலைமை இடமாக கொண்டு 182 நாடுகளுக்கு மேல் மிகச்சிறப்பாக செயல்பட்டு சுமார் 80 கோடிமக்களை சென்றடைந்துள்ளது. தனித்துவமான சுவாச பயிற்சி முறையான "சுதர்சன கிரியா”, அதோடுதியானம், யோகா பயிற்சி மூலம் மனஅழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, ஆகியவற்றை கையாள மக்களுக்கு உதவுவதோடு மனத் தெளிவு, உணர்ச்சிவலிமை மேலும் இசைவை மேம்படுத்துகின்றன. 

"வாழும்கலை" ஐக்கியநாடுகள் சபையுடன் (ECOSOC) சிறப்பு ஆலோசனை குழு அந்தஸ்தையும் பெற்றுள்ளது.  பலவிதமான நிலை பயிற்சிகள் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கிராமங்கள், சிறைச்சாலைகள், ஆயுதப்படைகள் மற்றும் அனைத்து தரப்பினர்களும் நடத்தப்பட்டு மிகப்பெரிய பலனை கொடுத்துள்ளது. அவர்களை நெறிப்படுத்தி, சிறந்த வாழ்க்கை முறையை தந்துள்ளது.தனிநபர்கள் நலனைக் கடந்து சமுதாய நலன்களிலும் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளது "வாழும்கலை"

சத்சங்கம் நிகழ்ச்சியில் பெங்களூர் ஆஸ்ரமத்தின் தலைசிறந்த பாடகர்கள் மற்றும் இசை குழுவினர்களும் ஆன்மீக இசையை வழங்குவார்கள். நிகழ்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தெய்வீக ருத்ராட்சமும் மற்றும் பிரசாதமும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை வாழும்கலை அமைப்பினர் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது தூத்துக்குடி "வாழும்கலை" நிர்வாகிகள் பிரம்மநாயகம், ராதாகிருஷ்ணன், அர்ச்சனா பக்ஷிராஜன், ராஜசேகர், செல்வராஜ், கண்ணா சில்க் பாலாஜி, சத்தியமூர்த்தி ஆசிரியர்கள், ஜெகதீசன், விஜயா, சங்கர், முருகேசன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.