தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது என மாவட்ட உதவி இயக்குநர் திருமதி.ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா தெரிவித்துள்ளார்...
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது என மாவட்ட உதவி இயக்குநர் திருமதி.ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2023 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆர்டிஜிஎஸ்/என்இஎப்டி மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக்கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2023. அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது detischennai@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டும் விவரங்கள் பெறலாம்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குநர் திருமதி.ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்