தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மார்ச்.4) உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மார்ச் 4 ல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மார்ச் 4 ல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக் அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் அய்யா வைகுண்டசுவாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 04.03.2023 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act-1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 விடுமுறை நாளான சனிக்கிழமையில் வருவதால் அன்றைய தினம் வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்காக / கல்வி நிறுவனங்களுக்காக இந்த உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனவே, 04.03.2023 அன்று வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு / கல்வி நிறுவனங்களுக்கு இதற்கு பதிலாக 11.03.2023 இரண்டாவது சனிக்கிழமை மாற்றுபணி நாளாக அறிவிக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.