தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் நாளை (ஜூலை 7) திட்டமிட்ட மின் நிறுத்தம் – மின்வாரியம் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் நாளை (ஜூலை 7) திட்டமிட்ட மின் நிறுத்தம் – மின்வாரியம் அறிவிப்பு

தூத்துக்குடி 110/22 கே.வி. நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, நாளை (07.07.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) தெரிவித்துள்ளது.

மின் நிறுத்தம் அமலாகும் முக்கிய பகுதிகள்: போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம், வி.இ. ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (விநியோகம்), நகர், தூத்துக்குடி அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.