ஆத்தூரில் ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயம்.
ஆத்தூரில் ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர், குச்சிகாடு சேர்ந்தவர் கந்தன் மகன் செந்தில்குமார்(43).இவர் அருகில் உள்ள சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு 10 மணிக்கு வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இரவு 10:30 மணி அளவில் தெற்கு ஆத்தூர் நரசன் விளை அருகே வரும்போது பின்னால் வந்த திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தஆம்னி பேருந்து கவனக்குறைவாகவும், அதிவிரைவாகவும், பஸ்ஸில் இடது பக்கம் பொருட்கள் வைக்கும் கதவு திறந்த நிலையில்வந்துள்ளது. பைக்கில் வந்த செந்தில்குமாரை ஆம்னி பேருந்து முந்திசெல்லும்பொழுதுஆம்னி பேருந்தின் பொருட்கள் வைக்கும் கதவு மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாகஉயிர் வந்தார். அதனைத் தொடர்ந்து நிற்காமல் சென்ற ஆம்னி பஸ் பைக்கில் வந்த தெற்கு ஆத்தூரை சேர்ந்த சிந்தா மகன் சாகுல் ஹமீது (43)என்பவரை முந்தி செல்லும்போது பொருட்கள் வைக்கும் கதவு இடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.தொடர்ந்து நிற்காமல் சென்ற பேருந்துநரசன் விளை தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா (75) என்ற முதியவர் மீது ஆம்னி பேருந்து கதவு மோதியதில் தலையில் பலத்த காயம் மடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் ஆத்தூர்பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மேலஆத்தூர் குச்சிக்காடு சேர்ந்த பலவேசம் மகள் பிரியதர்ஷினி (23) மீது மோதியது.இதில் அவர் பலத்த காயமடைந்தார்.இதனைத் தொடர்ந்து பேருந்தை அப்பகுதி மக்கள் வழிமறித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த விபத்தில்இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் இரண்டு பேரும் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியஆம்னி பேருந்து ஓட்டுநர் மதுபோதையில்இருந்ததாக தெரிய வருகிறது.
இதுகுறித்து ஆத்தூர்போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆம்னி பேருந்து ஓட்டி வந்த குரும்பூர் அருகே உள்ள நாகன்னியாபுரத்தைசேர்ந்த சந்தானம் மகன் மகேஷ் (30)என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.