மாலை நேரம் சூப்பரான Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பரான சிக்கன் கோலா உருண்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

மாலை நேரம் சூப்பரான Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பரான சிக்கன் கோலா உருண்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!


சிக்கன் கோலா உருண்டை | Chicken Kola Urundai Recipe In Tamil‌

சிக்கன் கோலா உருண்டை தமிழகத்தில் ஒரு பிரபலமான உணவு. வழக்கமாக நாம் செய்து சுவைக்கும் சிக்கன் உணவுகளை விட சிக்கன் கோலா உருண்டை ஒரு வித்தியாசமான உணவு. இதை நாம் சாதத்துக்கு சைடிஷ் ஆக உண்ணலாம். அது மட்டுமின்றி இதை நாம் தோசை, சப்பாத்தி, பரோட்டா, நாண், புல்கா, மற்றும் இடியாப்பத்திற்கு சைடிஷ் ஆக தொட்டு உண்ண சிக்கன் கோலா உருண்டை அட்டகாசமாக இருக்கும். இந்த கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான சிக்கன் கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
Prep Time15minutes 
Active Time15minutes 
Total Time30minutes 
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Chicken Kola Urundai

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 முட்டை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு

அரைக்க :

  • 1/4 கி எலும்பில்லாத சிக்கன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த கலவை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு, முட்டை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்போது இதனை சிறு உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வரை அப்படியே வைக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் கோலா உருண்டை தயார்.