வேடநத்தம் மாணவி கொலை: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி தூத்துக்குடியில் மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வேடநத்தம்  மாணவி கொலை: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி தூத்துக்குடியில் மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) ஆகிய அமைப்புகள் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமை வகித்தார்.

இதில் மாணவர் சங்க மாநில துணை செயலாளர் சைலேஸ் அருள்ராஜ், மாவட்ட செயலாளர் ராம் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், துணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பூமயில், மாவட்ட செயலாளர் ஜானகி, மாவட்ட தலைவர் கமலம், மாநகர் தலைவர் காளீஸ்வரி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாணவி கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.