தூத்துக்குடி விமான நிலையம் பெயர் மாற்றம்… ‘Tuticorin’க்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

தூத்துக்குடி விமான நிலையம் பெயர் மாற்றம்… ‘Tuticorin’க்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

தூத்துக்குடி போர் நடக்கக்கூடிய பகுதிகளில் இருந்து இந்தியர்கள் திரும்பி வருகின்றனர் பாரத பிரதமர் மோடியின் மனதில் தமிழ்நாடு மற்றும் தமிழக மக்கள் உள்ளனர் அதேபோன்று தமிழக மக்கள் பாரத பிரதமரை நேசிக்கின்றனர் தூத்துக்குடியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி 

தூத்துக்குடி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் Tuticorin விமான நிலையம் என்று இருந்ததை தூத்துக்குடி Thoothukudi விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பெயர் மாற்றம் செய்த பெயர் பலகையைத் திறந்து வைத்தனர்

பின்னர் நிகழ்ச்சிக்குப் பின்பு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

 

இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாகும் Tuticorin ஏர்போர்ட் தூத்துக்குடி விமான நிலையம் என அனைத்து மொழிகளிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியின் இலக்கியம் பண்பாடு கலாச்சாரம் வரலாறு ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் தூத்துக்குடி விமான நிலையம் கடந்த ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது 70 ஆயிரம் சதுர மீட்டரில் இந்த விமான நிலையம் செயல்படுகிறது தற்போது 2 லட்சம் விமான பயணிகள் இந்த மாந நிலையத்தை பயன்படுத்துகின்றனர் இதற்கு முன்னால் 20 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர் நிலையத்தின் ஓடுதளம் 1300 மீட்டரில் இருந்து 3,100 மீட்டராக மாற்றப்பட்டுள்ளது இதன் காரணமாக இங்கே மிகப் பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும் ஏர்பஸ் 320 மற்றும் போயிங்7373 ஆகிய வெகுதலைவு செல்லக்கூடிய விமானங்கள் இங்கு வந்து செல்லும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது

இங்குள்ள பொதுமக்கள் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய விமானங்கள் இயக்க வேண்டும் மேலும் பல்வேறு பெரிய நகரங்களுக்கு விமானம் இயக்க வேண்டுமென கோரிக்கையை கொடுத்துள்ளனர் எனவே மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சக என்ற முறையில் விமான நிறுவனங்களுடன் பேசி அதற்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் 

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு தலைமை தாங்கிய பின்பு பாரத பிரதமராக ஆன பின்பு விமான போக்குவரத்து துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது 166 விமான நிலையங்கள் உள்ளன 

தமிழகத்தில் விமான போக்குவரத்து துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2500 கோடியில் கட்டப்பட்டுள்ளது இன்னும் சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் 

இந்த விமான நிலையமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது மதுரை விமான நிலையம் மதுரை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது இதற்கு நான்கு நாட்கள் முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பாரத பிரதமர் அனுமதி வழங்கி மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது

சேலம் விமான நிலையம் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது கோயம்புத்தூர் விமான நிலையம் கூடுதல் பயணிகள் செல்லக்கூடிய வகையிலான விமான நிலையமாக கூடிய விரைவில் புதிதாக கட்டப்படும் இதற்கான அடிக்கல் நாட்டும் பணி விரைவில் நடைபெற உள்ளது

அடுத்ததாக நெய்வேலி மற்றும் வேலூரில் சிறிய ரக விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது வேலூரில் விமான கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன விமான சான்றிதழ் அனுமதிக்காக காத்து இருக்கிறது நெய்வேலி விமான நிலையம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படுகிறது இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன விரைவில் முடியும் பின்னர் விமான சேவை துவங்கும் 

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தில் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது 40 சதவீதம் கூடுதலாக விமான பயணிகள் விமானங்களை பயன்படுத்துகின்றனர் தமிழ்நாடு ஒரு உறுதியான தொழிற்சாலை அதிகளவில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம் அதிகளவு புதிய வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது தூத்துக்குடி துறைமுக நகரம் இதன்மூலம் விமான போக்குவரத்து அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது சுற்றுலாவிற்காகவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் விமானங்களை பயன்படுத்துகின்றனர்

விமான போக்குவரத்து துறை மட்டுமல்லாமல் ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் முன்னேறியுள்ளது கடந்த 12 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நெடுஞ்சாலை ஆக இருக்கட்டும் ரயில்வே துறையாக இருக்கட்டும் விமான போக்குவரத்து துறையாக இருக்கட்டும் கூடுதலாக இரண்டு மடங்கு பணம் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மனதில் தமிழ்நாடு மற்றும் தமிழக மக்கள் உள்ளனர் அவர் காசி தமிழ்ச் சங்கம் மற்றும் திருவள்ளுவர் கலை பண்பாட்டு மையம் என உலக அளவில் பாரத பிரதமர் தமிழர்கள் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார்

நான் மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு வந்து பார்த்ததில் தெரிகிறது தமிழக மக்கள் பாரத பிரதமரை அவ்வளவு நேசிக்கிறார்கள் அதை பார்க்க முடிகிறது இந்தியா உறுதியாக இருந்தால் தமிழ்நாடு உறுதியாக இருக்கும் தமிழ்நாடு உறுதியாக இருந்தால் இந்தியா உறுதியாக இருக்கும்

போர் நடக்கக்கூடிய வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்பி வருகின்றனர்