ஆத்தூர் அருகே காரில் கஞ்சா விற்பனை செய்த‌ 3 பேர் கைது: கார் பறிமுதல்!

ஆத்தூர் அருகே காரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆத்தூர் அருகே காரில் கஞ்சா விற்பனை செய்த‌ 3 பேர் கைது: கார் பறிமுதல்!

ஆத்தூர் அருகே காரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஆத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ஜெபராஜ் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆத்தூர் நரசன்விளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், 

அவர்கள் ஆத்தூர் சேர்ந்த பூமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் செல்வம் (எ) முத்து செல்வகுமார் (31), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த ராமர் மகன் அழகுமுத்து (21) மற்றும் பழையகாயல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சரவணன் (27) ஆகியோர் என்பதும் அவர்கள் காரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.