தூத்துக்குடியில் கேலி செய்ததால் முதியவர் குத்திக் கொலை : இளஞ்சிறார் உட்பட 2பேர் கைது!

தூத்துக்குடியில் கேலி செய்ததால் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி கிருபை நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பாண்டி (60). இவர், பழைய இரும்பு, பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை முனியசாமிபுரம் மேற்கு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

விசாரணையில் தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் (26), மற்றும் 3 சென்ட் அந்தோனியார் புரத்தை சேர்ந்த இளஞ்சிறார் ஆகிய 2 பேரும் சேர்ந்து பாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. நேற்று இரவு இரவு கிருபை நகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பாண்டி அவர்களைப் பார்த்து நக்கலாக பேசியதால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.