பெண்ணை வெட்டிக் கொலை செய்தவருக்கு 7 வருடங்கள் ஆயுள் தண்டனை!
கோழிக்காக நடந்த சண்டையில் பெண்ணை வெட்டிக் கொன்றவருக்கு 7 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி பிசிஆர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு, கோழி ஒன்று காணாமல் போனது சம்மந்தமாக யாரோ களவாடி சென்று விட்டார்கள் என்று மேற்படி காணாமல் போன கோழியின் உரிமையாளரான திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி ஜெயா (40) என்பவர் தெருவில் நின்று சத்தம்போட்டுள்ளார்.
அதை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டி (73) என்பவர் தன்னைத்தான் கோழி திருடியதாக சத்தம்போடுகிறார் என்று நினைத்து ஜெயாவை, இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால் மேற்படி பாண்டி ஜெயாவை சாதி குறித்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் பட்டியிலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கொலை வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோபால் புலன் விசாரணை செய்து கடந்த 02.09.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை பட்டியிலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி உதய வேலன் அவர்கள் இன்று (06.06.2024) குற்றவாளியான பாண்டி என்பவருக்கு 7 வருடங்கள் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000ஃ- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோபால் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் ராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.