நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி "ஜாதி வெறி சக்திகளே.. அடங்கிப்போ.. அடங்கிப்போ... அடங்கிப்போக மறுப்பாயானால் அடக்கிடுவோம்... அடக்கிடுவோம்..." என்ற கோஷங்கள் முழங்க தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்    நடைபெற்றது.

திருநெல்வேலி பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு  திருமணம் செய்து கொண்டனர்.

இதையரிந்த பெண் வீட்டை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட கும்பல் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கியும் அலுவலகத்தையும் தாக்கியுள்ளது. 

ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பாதுகாப்பு வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தை தாக்கிய சமூக விரோதிகளை  கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர், ஒன்றியம், புறநகர் கமிட்டிகள் சார்பில் சிதம்பரம் நகர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், புறநகர் செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், தா.ராஜா, ஆர்.பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, சொ.மாரியப்பன், ரவி தாகூர், சுரேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, மூத்த தோழர் பொன் ராஜ்,  மாநகர் குழு உறுப்பினர்கள்  ஆறுமுகம்,  ராமமூர்த்தி, தசலிஸ், காஸ்ட்ரோ, ஶ்ரீ நாத்,  ஒன்றியக்குழு, புறநகர் குழு  உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.