வாரம் ஒருமுறை ஆட்டு தலைக்கறி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
வாரம் ஒருமுறை ஆட்டு தலைக்கறி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

வாரம் ஒருமுறை ஆட்டு தலைக்கறி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Health Tips In Tamil: வார இறுதி வந்தாலே பலரும் தங்களின் வீடுகளில் மட்டன், சிக்கன், மீன் என்று வீடே மணக்கும் வகையில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவோம்.
சிலர் மட்டனின் உறுப்பு இறைச்சிகளை விரும்பி சாப்பிடுவார்கள். உதாரணமாக, சுவரொட்டி, ஆட்டு கால், ஆட்டுத் தலைக்கறி, ஈரல், குடல்/ போட்டி என்று ஆட்டின் பல பகுதிகளை விரும்பி சாப்பிடுவதுண்டு.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருப்பதோடு, பல சத்துக்களையும் உள்ளடக்கியது என்பதால் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதுவரை நாம் சுவரொட்டி, ஆட்டுக்கால், ஆட்டின் ஈரல் போன்றவற்றின் நன்மைகளைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது ஆட்டு தலைக்கறியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தான்.
ஆட்டின் தலைக்கறியில் பல சத்துக்கள் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது வாரம் ஒருமுறை ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. இதய நோய் தடுக்கப்படும்
ஆட்டின் தலைக்கறியை சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறை ஆட்டு தலைக்கறியை சமைத்து சாப்பிடுங்கள்.
2. புற்றுநோய் தடுக்கப்படும்
ஆட்டுத் தலைக்கறியில் CLA என்னும் இணைந்த லினோலிக் அமிலம் அதிகளவில் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, உடலினுள் ஏற்படும் பல அழற்சிகளைத் தடுக்கும். ஆகவே புற்றுநோய் வரக்கூடாதெனில், ஆட்டு தலைக்கறியை அவ்வப்போது சமைத்து சாப்பிடுங்கள்.
3. இரத்த சோகை தடுக்கப்படும்
ஆட்டு தலைக்கறியில் அதிகளவில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் லீன் புரோட்டீன்கள் உள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆகவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், ஆட்டு தலைக்கறியை அடிக்கடி சமைத்து சாப்பிடும் போது, இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை தடுக்கப்படும்.
4. பிறப்பு குறைபாடுகளை குறைக்கும்
கர்ப்பிணிப் பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் கர்ப்பிணிகள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் பிறப்பு குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், எவ்வித குறையும் இல்லாமல் பிறக்கும்.
5. மாதவிடாய் வலி குறையும்
பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியை சந்திக்கும் பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
6. பிற நன்மைகள்
கூடுதலாக, ஆட்டுத் தலைக்கறியை வாரம் ஒருமுறையாவது உட்கொண்டு வந்தால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். மேலும் சரும ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக சிறுநீரக நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை தடுக்கப்படும். எனவே இதுவரை நீங்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடாமல் இருந்தால், இனிமேல் சாப்பிட்டு, அதன் பலனைப் பெறுங்கள்.