சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிறைவு : 14 போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிறைவு : 14 போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!

தூத்துக்குடி கடலில் 2 நாட்கள் நடந்த ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல்வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் சாகர் கவாச் என்னும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தூத்துக்குடி கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 படகுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பயங்கரவாதிகள் வேடம் அணிந்த 14 பாதுகாப்பு படையினரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 போலி வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

நேற்று 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளில் யாரேனும் பதுங்கி உள்ளார்களா என்பது குறித்தும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வேறு யாரும் ஊடுறுவவில்லை. தூத்துக்குடி பகுதியில் ஊடுறுவ முயன்ற அனைவரையும் போலீசார் மடக்கி பிடித்ததால், ஆபரேஷன் கவாச் பாதுகாப்பு ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

------------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE