மகனுடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலி!

மகனுடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலி!

மகனுடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலி!

காடல்குடி அருகே மகனுடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி அருகில் உள்ள வெங்கடேஸ்வ ரபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மாசனம்மாள் (60). இவர் தனது மகன் சின்ன அப்பனுசாமி (30) என்பவர் உடன் விளாத்திகுளத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

எல்வி புரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாசனம்மாள் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இவ்விபத்தில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடல்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.